
A bomb planted inside a passenger minibus killed two people and injured 13 others on Thursday in Jaramana, a town near Syria’s capital Damascus, the Health Ministry said, according to state media.…
சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸ் அருகே உள்ள ஜரமானா பகுதியில் மினி பேருந்திற்குள் வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு திடீரென வெடித்தது. இந்த கோர விபத்தில் 2 பயணிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 13 பேர் படுகாயமடைந்தனர். மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் நடந்த இந்த தாக்குதலால் பேருந்தின் மேற்கூரை தூக்கி வீசப்பட்டது. காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக சிரியாவின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.


முழு செய்தியை ஆங்கிலத்தில் படிக்கவும் →